Connect with us

விளையாட்டு

இந்தியாவின் 2-வது பெரிய விளையாட்டு திருவிழா: புரோ கபடிக்கு எத்தனை மில்லியன் வியூஸ் தெரியுமா?

Published

on

PKL Indias second largest sporting league Season 11 reach over 283 million viewers across TV and digital Tamil News

Loading

இந்தியாவின் 2-வது பெரிய விளையாட்டு திருவிழா: புரோ கபடிக்கு எத்தனை மில்லியன் வியூஸ் தெரியுமா?

12 அணிகள் அணிகள் களமாடும் 12-வது புரோ கபடி லீக் தொடர் வருகிற வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்.29) முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.இம்முறை போட்டிகள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது.முதல் கட்ட லீக் ஆட்டங்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வருகிற வெள்ளிக்கிழமை முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடைபெறும் சூழலில், தொடக்கப் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் புனேரி பால்டனை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றன. இந்நிலையில், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மூலம் 283 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைந்தன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பெரிய லீக் ஆக புரோ கபடி உருவெடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் ஒளிபரப்பாகி வரும் டாப் ரியாலிட்டி ஷோ மற்றும் வினாடி வினா உள்ளிட்ட ஷோ-களின் வியூஸ்களை விட அதிகம் பெற்றுள்ளது. இத்தொடர் 10-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களில் 7 மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் சூழலில், தொடரை 140 மில்லியன் இந்தி பேசும் பார்வையாளர்கள் கண்டு கழித்துள்ளனர். மற்றும் மொழிகளில் பார்த்து மகிழும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும், இந்த சீசனில் ஒட்டு மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கையும் உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஜியோஸ்டார் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பேசுகையில், “புரோ கபடி லீக் தொடர் நம்பிக்கையான அதிக  பார்வையாளர்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, நமது நாட்டில் உள்ள மக்களில் பெரும்பாலோனோர் பின்தொடரும் விளையாட்டு போட்டிகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. இந்த சீசனில் இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், விளம்பரதாரர்களுக்கு கூடுதல் வெளிச்சம் கிடைக்கும். குறிப்பாக, இத்தொடர் பண்டிகை காலத்திற்கு சற்று முன்னதாக வருவதால், விளம்பரதாரர்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும்.” என்று அவர் கூறியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன