உலகம்
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!!
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!!
இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் போசோ மாவட்டத்துக்கு வடக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் 5.8 ரிச்டராக பதிவாகியுள்ளது.
சுமார் 15 தடவைகளுக்கும் மேலாக அதிர்வுகள் ஏற்பட்டதால் அங்குள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 29 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், மீட்புப்படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
