சினிமா
உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்ற நந்தமூரி பாலகிருஷ்ணா… எதற்காகத் தெரியுமா.?
உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்ற நந்தமூரி பாலகிருஷ்ணா… எதற்காகத் தெரியுமா.?
இந்திய சினிமாவில் அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் தெலுங்குத் திரையுலகின் சிகரம் நந்தமூரி பாலகிருஷ்ணா. தொடர்ந்து 50 ஆண்டுகள் ஹீரோவாக வெற்றிகரமாக நடித்ததற்காக, லண்டனில் உள்ள பிரபலமான “World Book of Records” அவரை சிறப்பித்து கௌரவித்துள்ளது.இந்த அம்சம் தற்போது தெலுங்கு மற்றும் இந்திய திரையுலகில் பெருமையாக பேசப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவரை வாழ்த்தி கொண்டிருக்கின்றனர்.நந்தமூரி பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர். அத்தகைய நடிகருக்கு இந்த பாராட்டு கிடைத்தது அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
