சினிமா
என்னது மீண்டும் சிறுத்தை சிவாவா, அலறி ஓடிய ரஜினிகாந்த் ரசிகர்கள்
என்னது மீண்டும் சிறுத்தை சிவாவா, அலறி ஓடிய ரஜினிகாந்த் ரசிகர்கள்
ரஜினி நடிப்பில் கூலி படம் இன்னும் 4 நாட்களில் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் ரஜினி அடுத்து ஜெய்லர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து யார் படத்தில் நடிப்பார் என்ற கேள்வி சுற்றி வர, இணையத்தில் ஓர் செய்தி தற்போது வைரல் ஆகி வருகிறது.அதில் ரஜினி அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதை கேட்ட ரசிகர்கள் என்னது சிவாவா என்று அலறியடித்து ஓடும் படு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.அதற்கு முக்கிய காரணம் சிவா எடுத்த அண்ணாத்த படம் ரஜினி ரசிகர்களை கடுமையாக சோதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
