Connect with us

உலகம்

காசா நகரைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்திற்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல்!

Published

on

Loading

காசா நகரைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்திற்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல்!

காசா நகரைக் கைப்பற்றுவதற்கான திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதைச் செயல்படுத்த சுமார் 60,000 ரிசர்வ் வீரர்களை அழைக்கவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது அமைச்சு இன்று (20) உறுதிப்படுத்தியது.

Advertisement

இந்த உத்தரவுகள் உடனடியாக வழங்கப்படவில்லை, மாறாக பல கட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டன.

அவற்றுள் சுமார் 40,000-50,000 வீரர்கள் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி பணிக்கு வர உத்தரவிடப்படுவார்கள்.

நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மற்றொரு கட்டத்தின் கீழும், 2026 பிப்ரவரி-மார்ச் இல் மூன்றாவது கட்டத்தின் கீழும் வீரர்கள் பணிக்கு வர உத்தரவிடப்படுவார்கள்.

Advertisement

தற்போது பணியில் இருக்கும் பல வீரர்களுக்கான ரிசர்வ் கடமையை 30-40 நாட்கள் நீட்டிப்பதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தாக்குதலின் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மொத்த ரிசர்வ் வீரர்களின் எண்ணிக்கையை சுமார் 130,000 ஆகக் கொண்டுவரும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன