உலகம்
காஸாவை மீட்பதே இஸ்ரேல் இலக்காம்; பிரதமர் நெதன்யாகு விளக்கம்!!!
காஸாவை மீட்பதே இஸ்ரேல் இலக்காம்; பிரதமர் நெதன்யாகு விளக்கம்!!!
காஸாவை ஆக்கிரமிப்பது எமது நோக்கமல்ல, அதை விடுவிப்பதே எமது இலக்கு. ஆனால் இஸ்ரேலுக்கு உள்ளேயும் வெளியேயும் சர்வதேச அளவில் பொய் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காஸாப்பகுதியில் பொதுமக்கள் கொல்லப்படுதல், சேதம், உதவிப்பொருள்கள் கிடைக்காமை என அனைத்துக்கும் ஹமாஸ் இயக்கம்தான் காரணம். காஸாவில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை குறுகிய காலத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.காஸாவை இராணுவமயத்தில் இருந்து விடுவித்தல், இஸ்ரேல் இராணுவம் பாதுகாப்பை மேற்கொள்ளுதல், இஸ்ரேல் அல்லாத சிவில் நிர்வாகம் பொறுப்பேற்றல் ஆகியவைதான் எங்கள் இலக்குகள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
