இந்தியா
கிருஷ்ண ஜெயந்தியன்று மின்சார விபத்தில் ஐவர் சாவு!
கிருஷ்ண ஜெயந்தியன்று மின்சார விபத்தில் ஐவர் சாவு!
ஹைதராபாத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த மின்சார விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். தேர் இழுக்கும் போது மின்கம்பியில் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
குறித்த சம்பவத்தில் 09பேர் மீது மின்சாரம் தாக்கியத்துடன் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ராமந்தபுரத்தில் உள்ள கோகுல் நகரில் நேற்று நள்ளிரவு கிருஷ்ணர் சிலை அமர வைக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. தேரை இழுத்துச் சென்ற வாகனம் பழுதடைந்ததால், இளைஞர்கள் தேரை கைகளால் இழுத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது, தேர் எதிர்பாராத விதமாக மின்கம்பியில் உரசியமையினால் ஒன்பது பேருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
இதில் 15 முதல் 39 வயதுக்கிடைப்பட்ட 5 பேர் உயிழந்ததுடன் 4 பேர் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
