இலங்கை
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு இன்று மீள ஆரம்பம்!!!
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு இன்று மீள ஆரம்பம்!!!
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகள் கடந்த 6ஆம் திகதிவரை முன்னெடுக்கப்பட்டிருந்தன. முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி இனங்காணப்பட்ட பகுதியில் மேலும் பல புதைகுழிகள் இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் காணப்படும் நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
