இலங்கை
செம்மணி விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது!
செம்மணி விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது!
செம்மணி விவகாரத்த்தில் அரசாங்கம் எவ்வித கண்காணிப்பையும் மேற்கொள்ளவில்லை. சுயாதீனமாகவே நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என்று வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது,
செம்மணி புதைகுழி மட்டுமல்ல மேலும் சில இடங்களிலும் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை தொடர்பில் பக்கச்சார்பற்ற நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதற்கு தேவையான நிதி, ஆளணி வளம் எனபன அரசால் வழங்கப்படுகினறன.
செம்மணி புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படட எலும்புக்கூடுகளை மக்களுக்கு அடையாளம் காண்பதற்கு காண்பிக்கப்பட்டது. இலங்கை வரலாறில் இதற்கு முன்னர் அவ்வாறு நடக்கவில்லை.
அதுபோல் செம்மணியை பார்வையிடுவதற்கு ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையின் ஆணையாளரையும் அனுமதித்தோம்.
நீதிமன்றம் வழங்கும் கடடளைகளுக்கு அமைய எதிர்கால நடவடிக்கைகள் அமையும். வடக்கிலும், கிழக்கிலும் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை ஏமாந்து ஆட்சியிலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் திருப்திப்படுகின்றோம் என்றார்.
