பொழுதுபோக்கு
ட்ரெஸ் மட்டும் தான் சமையல்; ஆனா நான் போர் வீரன்: நெருப்பை பற்றி பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்
ட்ரெஸ் மட்டும் தான் சமையல்; ஆனா நான் போர் வீரன்: நெருப்பை பற்றி பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்
காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்த புகைப்படம் வெளியானதில் இருந்து இணையத்தில் அதிகம் பேசப்படும் நபராக மாறியுள்ள பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவைக்கு அருகிலுள்ள மாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ். ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான இவர், அதைத் தொடர்ந்து ‘பென்குயின்’ படத்திலும் நடித்தார். சினிமாவில் நடித்திருந்தாலும், அவரைப் பிரபலமாக்கியது அவரது சமையல்தான். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சமையல் செய்து அசத்தியவர் ரங்கராஜ்.தற்போது, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் நடுவராகப் பங்கேற்று வரும் மதமபட்டி ரங்கராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது முதல் மனைவி ஸ்ருதி, ஒரு வழக்கறிஞர். இந்தச் சூழ்நிலையில், சமீபத்தில், மதமபட்டி ரங்கராஜின் காஸ்டியூம் டிசனைரான ஜாய் கிறிசால்டா, மதமபட்டி ரங்கராஜின் மனைவி என்று கூறி திருமண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்தாரா? ஆடி மாதத்தில் திருமணம் செய்ய மாட்டார்கள், இந்த திருமணம் எப்போதோ நடந்திருக்க வேண்டும் போட்டோ மட்டும் இப்போது வெளியாகியுள்ளது என்று நெட்டின்கள்கள் பலரும் கூறி வந்தனர். மேலும், கிரிசில்டா தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனிடையே சமீபத்தில், தனது காஸ்டியூம் டிசைனரை மாற்றிவிட்டதாக ரங்கராஜ் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதே சமயம், கிரிசில்டா, தங்கள் குழந்தையை வரவேற்க காத்திருப்பதாகவும், குழந்தைக்கு பெயர் வைத்துள்ளதாகவும் கூறியிருந்தார். அதேபோல், திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் சென்றிருந்த மாதம்பட்டி ரஙகராஜ், மனைவி பக்கத்தில் அமர்ந்திருந்தாலும், அவர் பக்கமே திரும்பாமல், முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவியது.A post shared by T.P.Rangharaaj (@madhampatty_rangaraj)இந்நிலையில், தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு சமையல்காரரைப் போல உடையணிந்து, ஒரு போர்வீரரைப் போல பணிபுரிகிறார். நெருப்பு ஒருபோதும் வெளியே இருக்காது… அது எப்போதும் உள்ளேயே இருக்கும் என்று பதிவிட்டு காஸ்டியூம் டிசைனர் மீனாட்சி ஸ்ரீதரன் என்று பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ குக் வித் கோமாளி செட்டுக்குள் எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
