இலங்கை
பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதே நிலைப்பாடு; விரைவில் நடக்கும் என்கிறது அரசாங்கம்!
பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதே நிலைப்பாடு; விரைவில் நடக்கும் என்கிறது அரசாங்கம்!
வடக்கில் மக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளார். தையிட்டி விகாரை பிரச்சினைக்கும் சுமுகமாகத் தீர்வு காணப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்ட விசேட ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
பொதுமக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்படும். தையிட்டி விகாரைப்பிரச்சினையும் தீர்க்கப்படும். வடக்குக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீடுகள் தொடர்பில் சில அதிகாரிகள் இழுத்தடிப்புப் போக்கைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தொடர்பாக எமக்குத் தெரியும். அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.
