சினிமா
ரவி மோகன் திறக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்..! முதலில் அழைக்கப்பட்டது யார் தெரியுமா.?
ரவி மோகன் திறக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்..! முதலில் அழைக்கப்பட்டது யார் தெரியுமா.?
தமிழ்த் திரைப்பட உலகில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் வெற்றிகரமாக நடித்து வந்த நடிகர் ரவி மோகன், தற்போது ஒரு புதிய பயணத்தை தொடக்கியுள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ள ரவி மோகனின், தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் விமரிசையாக இடம்பெறுகின்றது.இந்த புதிய முயற்சி, திரையுலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்க உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இதனை மேலும் சிறப்பிக்க, நடிகர் ரவி மோகன் அண்மையில் உலகநாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து, விழாவின் அழைப்பிதழை அளித்துள்ளார்.ரவி மோகனின் இந்த தயாரிப்பு நிறுவனம், வெறும் சினிமா மட்டுமல்ல. இது, சினிமா, டிஜிட்டல் மீடியா மற்றும் ஓடிடி தளங்களுக்கு தரமான உள்ளடக்கங்களை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. “இனிமேல் கதை சொல்லும் விதம் மாற்றப்பட வேண்டிய நேரம் இது” என்கிறார் ரவி மோகன்.தனது திரைப்பயணத்தின் முக்கியமான நாயகர்களில் ஒருவரான கமல்ஹாசனிடம் நேரில் சென்று அழைப்பிதழ் அளிப்பது, நடிகர் ரவி மோகனுக்குப் பெருமைக்குரிய தருணமாக அமைந்தது. இச்சந்திப்பின் போது இருவரும் சினிமா, சமகால திரை நிலவரங்கள் மற்றும் புதிய தலைமுறை கலைஞர்களுக்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
