இலங்கை
விபத்தில் காயமடைந்த முதியவர் பரிதாபச் சாவு!
விபத்தில் காயமடைந்த முதியவர் பரிதாபச் சாவு!
விபத்தில் காயமடைந்த முதியவர் ஒருவர், மேலதிக சிசிச்சையின்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடிப்பகுதியைச்சேர்ந்த
லட்சுமணன் நகுலேஸ்வரன் (வயது-61) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நெல்லியடியில் உள்ள சந்தைக்கு கடந்த 5ஆம் திகதி சென்றபோது மோட்டார்சைக்கிள் ஸ்ரான்ட் தட்டுப்பட்டு விபத்துக்கு உள்ளான அவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். மேலதிக சிகிச்சையின் போது நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
