Connect with us

இலங்கை

விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் பலி – யாழில் சம்பவம்!

Published

on

Loading

விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் பலி – யாழில் சம்பவம்!

யாழில் விபத்தில் சிக்கி உயிரிழந்த முதியவர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை காவல் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தநிலையில், 65 தொடக்கம் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேற்படி இடத்தில் நேற்றிரவு (24) குறித்த முதியவரின் சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த மரணத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து சந்தேகநபர் ஒருவர் தெல்லிப்பழை காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.

Advertisement

இது தொடர்பில் அவர் வழங்கிய வாக்குமூலத்தில், பட்டா ரக வாகனத்தை நேற்றிரவு (23) பின்பக்கமாக செலுத்தியபோது குறித்த முதியவர் தனது வாகனத்தில் சிக்குண்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் குறித்த முதியவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த சடலத்தை இடங்காண உதவுமாறு காவல்துறையின் மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன