இலங்கை
விவசாய முகாமைத்துவம் அமைச்சர் லால்காந்தவுடன் வவுனியாவில் கலந்துரையாடல்
விவசாய முகாமைத்துவம் அமைச்சர் லால்காந்தவுடன் வவுனியாவில் கலந்துரையாடல்
காலநிலை மாற்றத்தைத் தாக்குப்பிடிக்கும் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவக் கருத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று விவசாய அமைச்சர் லால்காந்த தலைமையில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைத்திட்ட அறிமுகம், திட்டச் செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் வவுனியா மாவட்டச் செயலாளர் சரத் சந்திர, விவசாய அமைச்சின் அதிகாரிகள், மேலதிக மாவட்டச் செயலர், பிரதேச செயலாளர்கள், விவசாயத் திணைக்கள அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
