இலங்கை
அரசின் அடக்குமுறைக்கு அடிபணியப்போவதில்லை; சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு!
அரசின் அடக்குமுறைக்கு அடிபணியப்போவதில்லை; சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு!
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அடிபணியப்போவதில்லை. ஜனநாயகத்தை வேட்டையாடுவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகள் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரைத்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று மூன்றாவது நாளாகவும் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
அரசாங்கத்தின் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறைகளுக்கு நாம் அடிபணியப்போவதில்லை. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார். ஜனநாயகத்தை தோற்கடிப்பதற்கான வேட்டையைத் தோற்கடிப்பதற்கு நாம் தயார். அதற்காக மக்கள் அணிதிரள வேண்டும். மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எதிரணித்தரப்பில் இருந்து வழங்கக் கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் நாம் வழங்குவோம். நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்காக என்றும் நாம் முன்னிலையாவோம் – என்றார்.
