பொழுதுபோக்கு
இதயம் எமோஜி, உச்சக்கட்ட மகிழ்ச்சி: காதலரை அறிமுகம் செய்த நடிகை நிவேதா பெத்துராஜ்: லேட்டஸ்ட் போட்டோ!
இதயம் எமோஜி, உச்சக்கட்ட மகிழ்ச்சி: காதலரை அறிமுகம் செய்த நடிகை நிவேதா பெத்துராஜ்: லேட்டஸ்ட் போட்டோ!
டிக் டிக் டிக் திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ், தனது காதலரை அறிமுகம் செய்யும் வகையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..2016-ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து, உதயநிதியுடன் பொதுவாக என் மனசு தங்கம், ஜெயம்ரவியுடன் டிக், டிக், டிக் விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், விஜய் ஆன்டனியுடன் திமிரு புடிச்சவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், குறித்து யூடியூப்பில் பிரபல பத்திரிக்கையாளர் ஒரு, அவருக்காக ஒரு நடிகர் ஆடம்பரமாக பணம் செலவு செய்வதாக கூறியிருந்தார்.மேலும நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி இவருக்காக பணம் செலவழித்து வருவதாகவும், துபாயில் உள்ள அவரது வீட்டை 50 கோடி ரூபாய்க்கு வாங்கி கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் நிவேதா பெத்துராஜ் உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தார். நடிப்பு மட்டுமல்லாமல், விளையாட்டிலும் ஆர்வம் கொண்ட நிவேதா பெத்துராஜ் பேட்மிண்டனில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அதே போல ஃபார்முலா ஒன் கார் பந்தய பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.இதனிடையே தற்போது, நிவேதா பெத்துராஜ் தனது காதலரை அறிமுகம் செய்துள்ளார். தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நிவேதா. மேலும் அதில் ஹார்ட்டின் எமோஜிக்களையும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில், நிவேதாவின் காதலரின் பெயர் ரஜித் இப்ராம். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர் தொழிலதிபராகவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)எனினும் இருவரும் அது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதே சமயம் இந்த பதிவுக்கு ரசிகர்களும் சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
