Connect with us

இலங்கை

இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று!

Published

on

Loading

இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று!

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று இரவு 6:51 மணிக்கு கம்பீரமாக வீதி வலம் வர உள்ளது. 

ஜூலை 30 ஆம் திகதி முதல் கும்பல் பெரஹெராவுடன் தொடங்கிய இந்தத் திருவிழா, கடந்த 9 நாட்களாக வீதி வலம் வந்து, இன்று 10வது நாளாக இறுதி ரந்தோலி பெரஹெராவுடன் உச்சக்கட்டத்தை எட்டுகிறது என்று தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்துள்ளார். 

Advertisement

இந்நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இலங்கை ரயில்வே திணைக்களம் விசேட ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கொழும்பு-கோட்டை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளிலிருந்து இன்று பல விசேட ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

மேலும் இலங்கை பொலிஸ் இறுதி ரந்தோலி பெரஹெராவிற்காக விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. 

Advertisement

இதில் வீதித் தடைகள், வாகனங்கள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகன நிறுத்த வசதிகள் உள்ளிட்டவை அடங்கும். 

பெரஹெரா பாதைகளில் ட்ரோன் இயக்கங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இறுதி ரந்தோலி பெரஹெராவில் அலங்கரிக்கப்பட்ட யானைகள், பாரம்பரிய கண்டிய நடனக் கலைஞர்கள், தீச்சாலை நிகழ்ச்சிகள் மற்றும் இசைக் குழுவினர் பங்கேற்கின்றனர். 

Advertisement

ஓகஸ்ட் 9 அன்று நீர் வெட்டும் விழா மற்றும் பகல் பெரஹெராவுடன் 2025 கண்டி எசல பெரஹெரா முடிவடைகிறது.[ஒ]

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன