Connect with us

இலங்கை

ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை ; ஜனாதிபதி அனுரகுமார வலியுறுத்து

Published

on

Loading

ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை ; ஜனாதிபதி அனுரகுமார வலியுறுத்து

ஊழல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் அனைத்து குடிமக்கள் மீதும் சட்டம் சமமாக அமல்படுத்தப்படும் என்று இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

புதிய சட்டம் இயற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரசு வழங்கிய வீடுகளும் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்படும்.

Advertisement

எந்தவொரு தனிநபரும் தனது நிர்வாகத்தின் கீழ் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை யூலைக் கலவரம், யாழ் நூலக எரிப்பு, பட்டலந்த வதைமுகாம் போன்ற சம்பவங்கள் இடம்பெற்ற காலப் பகுதியிலேயே கைது செய்திருக்க வேண்டுமென அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது ரணில் கைதிற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் குப்பைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் அவர்களால் அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது.

Advertisement

தற்போதைய கைது சின்ன விடயம் தான். ஆனால் எதிர்காலத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி ஊழல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் ஊழல்வாதிகள், அரச பணத்தை மோசடி செய்தவர்கள் மீது தொடர்ச்சியாக சட்டம் பாயும்.

காவல்துறைக்கு சுதந்திரமான வகையில் தங்களது கடமைகளை செய்வதற்கான சூழல் தற்போது ஏற்ப்படுத்தப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன