Connect with us

பொழுதுபோக்கு

ஒரே குடும்பத்தில் 7 இசை அமைப்பாளர்கள்; தேவா, ஸ்ரீகாந்த் தேவா தெரியும்: மீதி 5 பேர் யார் தெரியுமா?

Published

on

Screenshot 2025-08-27 183804

Loading

ஒரே குடும்பத்தில் 7 இசை அமைப்பாளர்கள்; தேவா, ஸ்ரீகாந்த் தேவா தெரியும்: மீதி 5 பேர் யார் தெரியுமா?

மாட்டுக்கார மன்னாரு என்ற திரைப்படத்தின் வாயிலாக திரைப்பட இசையுலகில் தனது கால் பதித்தவர் தேவநேசன் சொக்கலிங்கம். திரை இசைத் துறையில் இவரது பயணம் இந்த படத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்த அவர், குறுகிய காலத்திலேயே தனது தனித்துவமான பாணியால் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றார்.தொடர்ந்த முறையில், தேவா அவர்கள் கானா இசையிலும் மெலோடியிலும் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார். குறிப்பாக 1990-களில், அவரது இசைகள் தமிழ்சினிமாவை கலக்கியதோடு, மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டன. அந்தக் காலகட்டம் தேவாவின் இசையால் நிரம்பி இருந்தது என்று சொல்லப்படுவதும் அதன் சான்று தான்.முதலில் “தேவா” என்ற பெயரால் பொதுவாக அறியப்பட்ட இவர், காலப்போக்கில் அவரது மென்மையான மெலோடிகள் மற்றும் ஆடலுக்கேற்ற கானா பாடல்களின் மூலம் ரசிகர்களால் “தேனிசை தென்றல் தேவா” எனப் பேரழைக்கப்பட்டார்.கானா பாடல்களுக்கு உயிரூட்டிய இசையமைப்பாளர் என்ற நிலையை பெற்றதே தேவா அவர்கள்தான். இன்று “கானா” என்ற சொல் இசையுடன் எதையும் பேசும்போது, அது தேவா அவர்களின் நினைவின்றி இருக்க முடியாது. அவர் உருவாக்கிய இசைச்செயல்பாடுகள் தமிழ்சினிமாவின் ஓர் ஐடென்டிட்டியாகவே மாறியுள்ளது.அதனால்தான், தமிழ் திரைப்பட இசை ரசிகர்கள் மத்தியில் கானா இசையின் அதிபதியாகவும், மெலோடியின் மாஸ்டராகவும் தேவா என்ற பெயர் காலமெல்லாம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.இசைப் புயலாக 90கள் முழுக்க தமிழ் திரையுலகை ஆட்சிக்கொண்டவர் தேவா. அந்தக் காலகட்டத்தில் அவர் வழங்கிய ஹிட் பாடல்கள் இன்னும் ரசிகர்களின் நினைவில் இன்பமாக ஓலிக்கின்றன. அந்த வகையில், தேனிசை தென்றலாக ரசிகர்கள் மத்தியில் அடையாளம் பெற்ற தேவா, 90ஸ் காலத்தில் நெகிழ்ச்சிகரமான மெலோடிகளும், கலகலப்பான கானாக்களும், ஹிட் சாங்ஸ் அலைகளும் மூலம் தமிழ் சினிமாவை இசையால் செழிக்க வைத்தார்.அதிலும் முக்கியமாக, 1991 முதல் 1999 வரை — இந்த ஒன்பது வருடங்களில் தேவா வெறும் சில படங்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் டஜன் கணக்கான திரைப்படங்களுக்கு இசையமைத்து, தனது உழைப்பால் மற்றும் திறமையால் ஒரே ஒரு இசையமைப்பாளராக சாதனை புரிந்துள்ளார்.அனால் இவரது குடும்பத்தில் இருக்கின்ற 7 பேர் இசையமைப்பாளர் என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு மேடையில் அவர்கள் அனைவரையும் பற்றி தேவா அவராகவே கூறியிருப்பார். இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, சபேஷ், முரளி, சிவா, போபோ சசி, ஜெய், ஆகிய 7 இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் தேவா 400 படங்களுக்கும் மேல் இசையமைத்து இருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா 110 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன