Connect with us

இலங்கை

கிண்ணியா கால்நடை விவசாயிகளுக்கு மேய்ச்சல் தரைக்காக 2876 கெக்ரேயர் நிலம் விடுவிப்பு!

Published

on

Loading

கிண்ணியா கால்நடை விவசாயிகளுக்கு மேய்ச்சல் தரைக்காக 2876 கெக்ரேயர் நிலம் விடுவிப்பு!

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மேய்ச்சல் தரைக்காக போராடி வந்த கிண்ணியா பிரதேச கால்நடை விவசாயிகளுக்கு, மேய்ச்சல் தரைக்காக 2876 கெக்ரேயர் நிலம் வழங்க மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பில் கிண்ணியா கால்நடை வளர்ப்பு கூட்டுறவுச் சங்கத்தின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எம்.சி.சபருள்ளா கருத்துத் தெரிவிக்கையில், 

Advertisement

கிண்ணியா கால்நடை விவசாயிகளின் மேய்ச்சல் தரவை  உரிமையை சட்டரீதியாகப் பெறுவதற்காக 2023 ஆம் ஆண்டு  ஒக்டோபர் மாதம் 9ஆம் மேல் முறையீட்டு நீதிமன்றத்தை நாடி, ஆணை வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.

2010 ஆம் ஆண்டு அமைச்சரவை ஊடாக வழங்கப்பட்ட மேய்ச்சல் தரைக்கான அனுமதியை அடிப்படையாகக் கொண்டு தங்களுக்கு மேய்ச்சல் தரை வழங்கப்பட வேண்டும் என்று இந்த ஆணை வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நிவாரணமாக தடையை நீக்குவதோடு, மேச்சல் தரைக்கான நிலத்தை சட்டரீதியாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பின்னர், எந்த ஆட்சேபனையும் எதிர் மனுதாரர்களால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது பெரும்போக வேளாண்மை செய்கைகான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால், நீதிமன்றத்தால் மேய்ச்சல் தரையாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குள் அத்து மீறி விவசாய நடவடிக்கைகளில் எவராவது ஈடுபடுவார்களேயானால், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு அதிகாரமோ பலமோ கிண்ணியா கால்நடை வளர்ப்பு சங்கத்துக்கு கிடையாது. 

இந்த வழக்கில் 11 எதிர் மனுதாரர்கள் இருக்கிறார்கள். அவர்களே இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன