Connect with us

இலங்கை

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவு – இம்ரான் எம்.பி விடுத்த கோரிக்கை!

Published

on

Loading

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவு – இம்ரான் எம்.பி விடுத்த கோரிக்கை!

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப் படவில்லை என்ற தகவல் மிகவும் கவலை அளிக்கிறது. கிழக்கு மாகாண ஆளுநர் இது விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு கடைசியாக மே மாதம் வழங்கப்பட்டதாகவும், 

ஜூன், ஜூலை மாதங்களுக்கான கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் முன்பள்ளி ஆசிரியைகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இது இந்த ஆசிரியைகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.

கிழக்கு மாகாணத்தின் கல்விக்கு பலமான அத்திவாரம் இடுபவர்கள் முன்பள்ளி ஆசிரியைகள் தான். இவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதில் ஏன் இந்த அரசாங்கம் தாமதமாக உள்ளது? 

Advertisement

கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட முன்பள்ளி நிர்வாகமே இப்போது இயங்குகின்றது. 

எனவே ஆளுநரே இந்த விடயத்தில் தலையிட்டு மாதாந்தம் உரிய காலத்தில் கொடுப்பனவு வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன