Connect with us

இலங்கை

குருக்கள் மடம் மனித புதைக்குழியை தோண்டுவதற்கான வழக்கு விசாரணை இன்று!

Published

on

Loading

குருக்கள் மடம் மனித புதைக்குழியை தோண்டுவதற்கான வழக்கு விசாரணை இன்று!

குருக்கள் மடம் மனித புதைக்குழியை தோண்டுவதற்கான வழக்கு விசாரணை இன்று (26.05) முன்னெடுக்கப்படவுள்ளது. 

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம் யாத்ரீகர்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்டிருந்தனர். 

Advertisement

இது தொடர்பான வழக்கு விசாரணை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் சார்பில் ஏ.எம்.எம். ரவூப் என்பவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

 இந்நிலையில், களுவாஞ்சிக்குடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

Advertisement

இதன்போது, சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 மேலும், சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியை சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளப்படுத்தி, பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன