இலங்கை
கொழும்பில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ; துப்பாக்கிதாரி கைது
கொழும்பில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ; துப்பாக்கிதாரி கைது
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜிந்துபிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின்போது, திட்டமிட்ட குற்றவாளியும், போதைப்பொருள் கடத்தல்காரருமான படோவிட்ட அசங்கவின் முக்கிய உதவியாளரான ”தெஹிவல சாண்ட்ரோ” வழங்கிய ஒப்பந்தத்தின்படி, 500,000 ரூபாய்க்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க நுகேகொட நீதவான் நீதிமன்றம் காவல்துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
