இலங்கை
சட்டத்துக்கு அப்பாற்பட்டு எவரும் நாட்டில் இல்லை; ஜனாதிபதி அநுர உறுதி!
சட்டத்துக்கு அப்பாற்பட்டு எவரும் நாட்டில் இல்லை; ஜனாதிபதி அநுர உறுதி!
யார் குற்றம் இழைத்தாலும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று எவரும் இல்லை என்று ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி அநுர மேலும் தெரிவித்ததாவது:-
அனைத்து குடிமக்கள் மீதும் சட்டம் சமமாகப் பிரயோகிக்கப்படும். ஊழல்களிலும், மோசடியிலும் ஈடுபட்ட எவராக இருந்தாலும் அவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்.
பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கும் நீதியை உறுதிசெய்வதற்கும் பரந்த முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. இந்த நடவடிக்கைகளில் நாங்கள் எப்போதும் எவருக்காகவும் சமரசங்களைச் செய்து கொள்ளப்போவதில்லை.
செப்ரெம்பர் மாதம் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து அரசமாளிகைகளும் அரசாங்கத்தால் திரும்பப்பெறப்படும். இந்த விடயத்திலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம் – என்றார்.
