இலங்கை
சிறுபிள்ளைத்தனத்தை அரசாங்கம் கைவிடவும்; மனோ கணேசன் எம்.பி. தெரிவிப்பு!
சிறுபிள்ளைத்தனத்தை அரசாங்கம் கைவிடவும்; மனோ கணேசன் எம்.பி. தெரிவிப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை அரசாங்கம் கைவிடவேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் பழிவாங்கல் செயற்பாட்டைக் கூட்டு எதிரணியாக நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகப் பட்டலந்த வதை முகாம் குற்றச்சாட்டு, மத்திய வங்கிப் பிணை முறிமோசடிக் குற்றச்சாட்டு என்பவற்றை மக்கள் முன்வைத்து, இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் எனக் கூறித்தான் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. அதைச் செய்யுங்கள்.
ஆனால் தற்போது ஜனநாயகம் குறித்துக் கேள்வி எழுந்துள்ளது. பணத்தை மீளக்கோரி ரணிலுக்கு கடிதம் அனுப்பி இருக்கலாம். அவர்மீளச் செலுத்தி இருக்காவிட்டால் நடவடிக்கை எடுத்திருக்கலாம். எனவே இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் – என்றார்.
