Connect with us

சினிமா

செப்டம்பரில் தமிழ் சினிமா புயல்..தணிக்கை முடிவுகள் வெளியீடு..ரசிகர்கள் உற்சாகம்!

Published

on

Loading

செப்டம்பரில் தமிழ் சினிமா புயல்..தணிக்கை முடிவுகள் வெளியீடு..ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த செப்டம்பர் மாதம்,  முக்கிய பிரபலங்களின் படங்கள் திரைக்கு வந்துள்ளதால், பரபரப்பான மாதமாக மாறியுள்ளது.குறிப்பாக செப்டம்பர் 5 மற்றும் 12ஆம் திகதிகளில் வெளியாகும் படங்களுக்கான அதிகாரப்பூர்வ தணிக்கை அறிக்கை குழுவின் தீர்ப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.செப்டம்பர் 5ஆம் திகதி  வெளியாகும் ஒருபடம்தான்“மதராஸி”.   ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அதிகாரப்பூர்வ முடிவில் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் படக்குழுவும் ரசிகர்களும் ஏமாற்றத்தில் உள்ளனர்.இதேவேளை  செப்டம்பர் 5ஆம் திகதி  வெளியாகும்  மற்றொரு படமாக கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் உருவான   “காதி” திரைப்படம் காணப்படுகிறது.வலுவான கதைக்களம் மற்றும் ஹீரோவின் நடிப்பு காரணமாக, இப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக “பிளாக்பஸ்டர்” பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது அந்த படக்குழுவிற்கு பெரும் வெற்றியாக அமைந்துள்ளது.இதேவேளை  செப்டம்பர் 12ஆம் திகதி “காந்தா” திரைப்படம் வெளியாகிறது.“காந்தா” – குடும்பம் சார்ந்த உணர்வுகள், அதிரடி, திரில்லர் காட்சிகள் அனைத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம், அதிகாரப்பூர்வ அறிக்கையில் “டபுள் பிளாக்பஸ்டர்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டு முழுவதும் பேசப்படும் படங்களில் ஒன்றாக ரசிகர்களால் கருதப்படுகிறது.இந்த முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் விவாதம் கிளம்பியுள்ளது. “மதராஸி” படத்தை எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், “காதி” மற்றும் “காந்தா” படங்களின் வெற்றியால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.இதனால், செப்டம்பர் மாதம் தமிழ் சினிமாவின் வரலாற்றில் மறக்க முடியாத மாதமாக மாறியுள்ளது. அடுத்த வாரங்களில் வெளியாகும் படங்கள் இந்த வெற்றியை மீறுமா என்பது ரசிகர்களிடையே ஆவலை அதிகரித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன