இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 16 என்புத்தொகுதிகள்!
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 16 என்புத்தொகுதிகள்!
அரியாலை செம்மணி மனிதப்புதைகுழியின் மீதான நேற்றைய அகழ்வுப் பணிகளின்போது, மேலும் 16 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி நடவடிக்கைகள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு பட்டிருந்தது. நேற்றைய அகழ்வுப் அகழ்வெல்லை விரிவாக்கம் செய்யப் பணிகளின்போதே மேலும் 16 என்புத்தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. அவற்றின் மீதான தொடர்ச்சியான அகழ்வு நடவடிக்கைகள் பேராசிரியர் ராஜ்சோமதேவ குழுவினரால் இன்று மேற்கொள்ளப்படவுள்ளன.
