இலங்கை
சைக்கிளில் சென்றவர் விபத்தில் உயிரிழப்பு; கனகராயன்குளத்தில் சோகம்!
சைக்கிளில் சென்றவர் விபத்தில் உயிரிழப்பு; கனகராயன்குளத்தில் சோகம்!
வவுனியா, கனகராயன்குளம், கொல்லர் புளியங்குளத்தில் நேற்று மதியம் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொல்லர் புளியங்குளத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் (வயது-61) என்பவரே உயிரிழந்தவராவார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த கனகரக வாகனம் எதிரே சைக்கிளில் வந்தவர் மீது மோதியது. இதனால் சைக்கிளில் பயணித்தவர் இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில், மாங்குளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்தார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
