இலங்கை
சைவநெறிப் பரீட்சைகள்
சைவநெறிப் பரீட்சைகள்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் கோட்பாட்டுக்கமைய பாடசாலை மாணவர்களிடையே சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் நோக்குடன் சைவபரிபாலன சபையினால் நடத்தப்படும் 2025ஆம் ஆண்டுக்குரிய பரீட்சைகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி பாடசாலைகளில் நடைபெறும்.
தரம் 2முதல் தரம் 12வரையான மாணவர்களுக்கு சைவநெறி மற்றும் தரம் 2முதல் 8வரையான மாணவர்களுக்கு தமிழ்மொழிப் பாடங்களுக்கான பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் செயற்றிறனை அடிப்படையாகக்கொண்டு சைவநெறி மற்றும் தமிழ்பாடங்களுக்குரிய சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன் ஒவ்வொரு தரத்திலும் 1.2,3ஆம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.10,000, ரூ.7000, ரூ.5000 ஆகவும் தொடர்ந்து 12மாணவர்களுக்கு 3000ரூபாவும் பணப்பரிசில்களாக வழங்கப்படும்.
இப்பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. புதிதாக இணைந்து கொள்ள விரும்பும் பாடசாலைகள் 0777895716அல்லது 0212227678 எனும் தொலைபேசி இலக்கங்களுடன்தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
