Connect with us

இலங்கை

தனிக்கட்சி ஆட்சிக்கு ஜே.வி.பி. முனைப்பு; சம்பிக்க சுட்டிக்காட்டு!

Published

on

Loading

தனிக்கட்சி ஆட்சிக்கு ஜே.வி.பி. முனைப்பு; சம்பிக்க சுட்டிக்காட்டு!

தனிக்கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்துவதற்கு ஜே.வி.பி.முயற்சித்துவருகின்றது. இதற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; 1982 இல் அரச சொத்துகளுக்குக் கட்சியொன்று சேதம் விளைவித்ததால் தான், சட்ட நடவடிக்கையின் நிமித்தம் பாதுகாப்புச் சொத்துச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2022 இல் நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்காக வீதியில் இறங்கிய கட்சிதான். பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கைது செய்துள்ளது. எனவே, அரசியல் வேறுபாடுகள் இருப்பினும், ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்துத் தரப்பினரும் இதற்கு எதிராக அணிதிரள வேண்டும் – என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன