சினிமா
தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு – 100 மில்லியன் கிளப்பில் ‘மோனிகா’ பாடல்..!
தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு – 100 மில்லியன் கிளப்பில் ‘மோனிகா’ பாடல்..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கூலி’. இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி உலகெங்குமுள்ள திரையரங்குகளில் வெளியானது. இதனிடையே‘கூலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மோனிகா’ பாடல் லிரிக் வீடியோ, யூடியூபில் வெளியான சில மாதங்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றது.அனிருத் இசையமைப்பில் விஷ்ணு எடவன் எழுதிய இப்பாடலை சுப்லாஷ்னி, பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து பாடியிருந்தார்.இப்பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனம் நல்ல வரவேற்பைப் பெற்ற அதேவேளை மோனிகா’ பாடல் வீடியோவில் மலையாள நடிகர் சவுபின் சாஹிர் முழு எனர்ஜியுடன் அட்டகாசமாக குத்தாட்டம் போட்டு கவனிக்க வைத்துள்ளார்.அனிருத் இசையமைத்த இந்த பாடல், ரசிகர்களிடையே விரைவில் வைரலாகி, தற்போது 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது.இந்த சாதனையால், ‘மோனிகா’ பாடல், சமீபத்திய காலத்தில் தமிழ் சினிமாவில் அதிகம் பார்வையிடப்பட்ட லிரிக் வீடியோக்களில் ஒன்றாக திகழ்கிறது.
