இலங்கை
திருகோணமலையில் இலங்கை வங்கி ஊழியர்கள் போராடடம்!
திருகோணமலையில் இலங்கை வங்கி ஊழியர்கள் போராடடம்!
இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கமும் அதனுடன் இணைந்த கூட்டமைப்பும் நாடளாவிய அளவில் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக திருகோணமலையிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருகோணமலை நகரில் இன்று (12) குறித்த போராட்டம் நடைபெற்றது.
அதன்படி, 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் வங்கிச் சேவையில் இணைந்த உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்துச் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அத்துடன் வீடமைப்புத் திட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட இரு வங்கிகளுக்கு எதிராக அரசால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இவ்வருடம் முதல் வரிக்கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அரசு தெரிவித்திருந்த போதிலும் இன்னமும் அவை அரசினால் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை அதனையும் இந்த அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை இதன்போது முன்வைக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் இலங்கை வங்கிக் கிளைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
