இலங்கை
நடமாடும் சுகாதார சேவை செப்ரெம்பரில் நெடுந்தீவில்!!!
நடமாடும் சுகாதார சேவை செப்ரெம்பரில் நெடுந்தீவில்!!!
நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்ரம்பர் 12ஆம், 13ஆம் திகதிகளில் விசேட சுகாதார நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
நடமாடும் சேவை தொடர்பாகத் துறைசார் அதிகாரிகள் மற்றும் உள்ளூர்ப் பிரதிநிதிகளுடனான முன்னாயத்தக் கலந்துரையாடல் பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கேதீசன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் யாழ். பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் நிகழ்வு தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.
