Connect with us

இலங்கை

பல விடயங்களுக்கு தீர்வு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

Published

on

Loading

பல விடயங்களுக்கு தீர்வு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

யாழ். செம்மணி, முல்லைத்தீவு, மற்றும் சட்டவிரோத சமூக செயற்பாடுகளுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்றைய தினம் (13) காந்தி பூங்காவில் காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.

Advertisement

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், வைத்தியர் சிறிநாத், மட்டு மாநகரசபை முதல்வர் மற்றும் பிரதேச சபை மாநகரசபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது முத்தையன்கட்டு இராணுவமுகாமில் படுகொலை செய்யப்பட்ட கபில்ராயுக்கு நீதி வேண்டும், இராணுவமே வெளியேறு வடக்கும் கிழககும் தமிழ்களுடைய தாயகம், இராணுவமே வெளியேறு போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இதேவேளை இன்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் பாதுகாப்பு தொடர்பாக இடம்பெற்றுவருகின்றது.

Advertisement

இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சர் வரும் நிலையில் நகர் மற்றும் காந்திபூங்கா அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெறும் பழைய கச்சேரி ஆகிய பிரதேசங்களில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு முக்கிய சந்திகளில் நிறுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பலத்த பாதுகாப்புக்;கு மத்தியில் நீதி கோரி போரட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன