சினிமா
பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு பதிவு…!காரணம் என்ன தெரியுமா?
பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு பதிவு…!காரணம் என்ன தெரியுமா?
ராஜஸ்தானின் பரத் பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் வாங்கிய ஹூண்டாய் காரில் தொடர்ந்த தொழில்நுட்ப குறைகள் இருப்பதாக குற்றம்சாட்டிய நிலையில், ஹூண்டாய் நிறுவனம் மற்றும் அதன் பிரமுகரசான சினிமா நட்சத்திரங்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு, பரத் பூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பதிவு செய்யப்பட்டது. புகார் தெரிவித்த பெண்ணின் கூறுப்படி, வாங்கிய ஹூண்டாய் காரில் பல முறை பழுதுகள் ஏற்பட்டதுடன், நிறுவனம் எந்த உரிய நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனடிப்படையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் இணைந்து விளம்பரங்களில் பங்கேற்று வாடிக்கையாளர்களை தவறான முறையில் ஈர்த்ததாக ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், நம்பிக்கையை மோசடியாக பயன்படுத்தல், வஞ்சனை, மற்றும் தவறான விளம்பரம் தொடர்பான பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனமும் அதன் பிரமுகர்களும் இன்னும் இதற்கு பதிலளிக்கவில்லை. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
