இலங்கை
புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய முடிவு
புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய முடிவு
புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சில உள்ளூராட்சி நிறுவனங்களில் கிராமப்புற அபிவிருத்திக்கு தேவையான பெக்கோ போன்ற இயந்திரங்கள் இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
பல உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்போது அத்தகைய இயந்திரங்கள் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
தற்போதுள்ள இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சந்தன அபேரத்ன மேலும் தெரிவித்தார்.
