சினிமா
புதிய தோற்றத்தில் களமிறங்கும் யோகிபாபு.! ‘சன்னிதானம் P.O’ படத்தின் பர்ஸ்ட் லுக் வைரல்.!
புதிய தோற்றத்தில் களமிறங்கும் யோகிபாபு.! ‘சன்னிதானம் P.O’ படத்தின் பர்ஸ்ட் லுக் வைரல்.!
தமிழ் சினிமாவில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களை வென்றுள்ள யோகி பாபு, தற்போது புதிய படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ‘சன்னிதானம் P.O’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை இன்று அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த படத்தை இயக்கியுள்ளார் அமுத சாரதி. இத்திரைப்படம், யோகி பாபுவை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது.படத்தின் தலைப்பு ‘சன்னிதானம் P.O’ என்பது சுவாரஸ்யமான, கிராமத்து பின்னணியை அடிப்படையாக கொண்ட கதையாக அமைந்திருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படக்குழுவினர் இதுவரை கதை பற்றிய முழுமையான தகவல்களை வெளியிடவில்லை. ஆனால், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்தவுடன் ரசிகர்களிடம் வெறித்தனமான எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
