இலங்கை
போயா தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!
போயா தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பிரதேசத்தில் போயா தினமான நேற்று (08) சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் வியாபரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 60 மதுபான போத்தல்களும், 4490 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று பகல் குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போதே குறித்த சந்தேகநபர் சிக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
