இலங்கை
மன்னார் காற்றாலைத் திட்டத்தால் சூழலுக்கு எந்தப்பாதிப்புமில்லை; அமைச்சரின் கருத்துக்கு சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
மன்னார் காற்றாலைத் திட்டத்தால் சூழலுக்கு எந்தப்பாதிப்புமில்லை; அமைச்சரின் கருத்துக்கு சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
மன்னாரில் திட்டமிட்டுள்ள காற்றாலை மின்திட்டத்தால் பறவைகளுக்கும், இயற்கைச் சமநிலைக்கும் பாதிப்பு ஏற்படாது என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ள நிலையில், சூழல் ஆர்வலர்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
காற்றாலை மின்திட்டத்தால் பறவைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறப்படுவது ஆதாரமற்ற விடயம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மன்னாரை சில தரப்பினர் ஒரு சொர்க்கம் எனவும், அது காற்றாலை விசையாழிகளால் அழிக்கப்படலாம் எனவும்
தெரிவிக்கின்றனர்.
மன்னார் முதல் பூநகரி வடக்கு முதல் காணப்படும் பகுதி ஒரு தரிசுநிலம். மக்கள் பறவைகள் தொடர்பாகப் பேசுகின்றனர். ஆனால் அந்தப் பாதையில் பறவைகள் எவையுமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். சூழல் ஆர்வலர்களான மெலனி குணதிலக, ரெகான் ஜயவிக்கிரம போன்றோர் அமைச்சரின் கருத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
