இலங்கை
முத்துஐயன்கட்டு விவகாரத்தில் இராணுவத்தைக் காக்க முயற்சி; சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு!
முத்துஐயன்கட்டு விவகாரத்தில் இராணுவத்தைக் காக்க முயற்சி; சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு!
முத்துஐயன்கட்டு இளைஞர்கொலை விவகாரத்தில் இராணுவத்தினரைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் செயற்படுகிறது. இவ்வாறான சம்பவங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனியொருபோதும் இடம்பெறாத வகையில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவுப் பகுதியில் தமிழ் இளைஞர் இவ்வாறு கொலை செய்யப்பட்டதை அலட்சியப்படுத்தும் அரசாங்கம் அம்பாந்தோட்டைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தால் அரசாங்கம் எவ்வாறான வகையில் செயற்பட்டிருக்கும். இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
