இலங்கை
ரணிலிற்காக வாதாடிய சட்டத்தரணிகள் இவர்கள் தான்!
ரணிலிற்காக வாதாடிய சட்டத்தரணிகள் இவர்கள் தான்!
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
ரணில் விக்ரமசிங்கவிற்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன மற்றும் அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு ஆஜரானது.
இவர்களது வாதட்ட திறமையினால் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர ரணிலிற்கு பிணை வழங்கியுள்ளார்.
சட்டத்தரணி திலக் மாரப்பன 2000 ஆம் ஆண்டில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
