Connect with us

இலங்கை

ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று வடக்கிலும் சில அரசியல்வாதிகளின் வாழ்வில் விரைவில் ‘வசந்தம் வீசும்!

Published

on

Loading

ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று வடக்கிலும் சில அரசியல்வாதிகளின் வாழ்வில் விரைவில் ‘வசந்தம் வீசும்!

சட்டத்தின் முன் அனைவரும் சமம்- கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு

ரணில் விக்கிரமசிங்கவை நெருங்கமுடியாது என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் அவர் மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ஆட்டம் கண்டுள்ளனர். விரைவில் வடக்கில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் சிலரின் வாழ்விலும் ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று வசந்தம் பிறக்கும் என்று நினைக்கின்றோம். இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Advertisement

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்ட விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது. அவர் மீது கைவைக்க முடியாது. அவர் சர்வதேச இராஜதந்திரம் தெரிந்தவர், நரித்தனமானவர், அவரோடு விளையாட முற்படவேண்டாம் என்று எதிரணியினர் கூறிவந்தனர். இப்போது ரணில் விக்கிரமசிங்கமீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளனர்.

நாட்டுக்குத் தீங்கு, இழப்பு ஏற்படுத்தியது ரணிலா, ராஜபக்சக்களா என்பது எமக்கு முக்கியமல்ல. எவராக இருந்தாலும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகச் சட்டம் தனது கடமையைச் செய்யும். வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள் வாழ்விலும் இன்னும் ஒரு சில வாரங்களில் ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று வசந்தம் வீசும் என்று நினைக்கின்றோம் – என்றார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன