இலங்கை
ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை
ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரச நிதியை முறைக்கேடாக பயன்படித்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருதுடன் Zoom தொழிநுட்பத்தின் ஊடாக வழக்கு விசாரணைகளுக்கு முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.
