சினிமா
விநாயக சதுர்த்தியை கலக்க வரும் இட்லிகடை… மகிழ்ச்சியில் குதூகலிக்கும் ரசிகர்கள்.!
விநாயக சதுர்த்தியை கலக்க வரும் இட்லிகடை… மகிழ்ச்சியில் குதூகலிக்கும் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் பல்துறை திறமை கொண்டவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பில் மட்டுமல்லாது, இயக்கம், பாடல் வரிகள், பின்னணி இசை மற்றும் தயாரிப்பு என சினிமாவின் பல பரிமாணங்களிலும் தன்னை நிரூபித்தவர். அவரது இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘இட்லி கடை’, தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இந்த படத்தின் முதல் பாடலான ‘என்ன சுகம்’ ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இப்போது இரண்டாவது பாடல் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.படக்குழுவின் தகவலின்படி, ‘இட்லி கடை’ படத்தின் இரண்டாவது பாடல், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும். இந்த பாட்டின் பெயர் மற்றும் காட்சி விவரங்கள் தற்போது மறைக்கப்பட்டாலும், இது ஒரு ஆன்மீகத்துடன் கூடிய வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடல் என கூறப்படுகிறது.
