Connect with us

இலங்கை

வெளிநாடுகளின் அழுத்தம் ரணில் விடயத்தில் இல்லை; அமைச்சர் பிமல் தெரிவிப்பு!

Published

on

Loading

வெளிநாடுகளின் அழுத்தம் ரணில் விடயத்தில் இல்லை; அமைச்சர் பிமல் தெரிவிப்பு!

இந்தியப் பிரதமர் மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தங்களாலேயே ரணில் விக்கிரமசிங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனக் கூறப்படுவதில் உண்மை இல்லை. ரணில் விவகாரத்தில் சட்டத்தின் படியே அரசாங்கம் செயற்படுகின்றது என்று சபை முதல்வரும் அமச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத் தில் நேற்று நடத்தப்பட்ட விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மற்றும் மேற்குலக நாடுகளின் தலைவர்களின் அழுத்தம் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று வெளியாகும் தகவல்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

Advertisement

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இது தொடர்பில் எனக்குத் தெரியாது. எமது நாட்டுச் சட்டத்தை மாற்றுவதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் தலையிடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறான கருத்துகள் உலக நாடுகளின் தலைவர்களை அவமதிக்கும் செயலாகும். ரணில் போன்றவர்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் என்ற விம்பம் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் சட்டம் அனைவருக்கும் சமம் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் உள்ளவர்களுக்கு நோய் ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது சாதாரண நடைமுறையாகும். ஆனால் ரணில், ராஜபக்சக்கள் அவ்வாறு செயற்படவில்லை. அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டனர். இந்த விடயத்தில் நாங்கள் சட்டபூர்வமாகவே செயற்படுகின்றோம். பொலிஸ் மற்றும் சிறைச்சாலைத் திணைக்களம் என்பன சுயாதீனமாகச் செயற்படுகின்றன – என்றார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன