Connect with us

வணிகம்

Gold Rate Today, 27 August: மீண்டும் ரூ.75,000 தாண்டியது தங்கம் விலை; நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Published

on

Gold rate 4

Loading

Gold Rate Today, 27 August: மீண்டும் ரூ.75,000 தாண்டியது தங்கம் விலை; நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Gold Rate Today, 27 August: தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து மக்களை கதி கலங்க வைத்து வருகிறது. இடையிடையே சற்று குறைந்தாலும் அவ்வப்போது புதிய உச்சம் தொட்டு, நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கிறது. கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.குறிப்பாக, இம்மாத தொடக்கத்தில் சவரன் தங்கம் ரூ.73,000 ஆக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து கடந்த ஆக.6-ம் தேதி ரூ.75,000-ஐ தாண்டியது. அதன்பிறகு 7-ம் தேதி ரூ.75,200 ஆகவும், அடுத்த நாள் ரூ.75,760 ஆகவும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த தொடர் விலை உயர்வால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்தனர்.இந்த சூழலில் ஆக.23 (சனிக்கிழமை) தங்கம் விலை மேலும் அதிகரித்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,315க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.74,520 க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமையில் விலை மாற்றமில்லை. நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 25), 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,305 ரூபாய்க்கும், சவரன் 74,440 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஆகஸ்ட் 26) தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 9,355 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 74,840 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.நேற்று (ஆக.26) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,120க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,390க்கு விற்பனையாகியது. இந்நிலையில், இன்றும் (ஆக.27) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.75,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.9,390-க்கும் விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன