உலகம்
இந்தியா – சீனா இடையே மீண்டும் எல்லை வர்த்தகம்
இந்தியா – சீனா இடையே மீண்டும் எல்லை வர்த்தகம்
இந்தியா – சீனா இடையே மீண்டும் விமானப் போக்குவரத்துச் சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை ஆரம்பிக்க இரு நாடுகளும் அனுமதியளித்துள்ளன.
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா -சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம், இமாச்சலப் பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் அனுமதியளித்துள்ளது.
வர்த்தகத்தோடு, கைலாஷ் மான்சரோவர் யாத்திரையும் மீண்டும் ஆரம்பமாகவேண்டும் என்ற கோரிக்கைக்கும் சீனா சாதகமாகப் பதிலளித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
