உலகம்
இஸ்ரேல் தாக்குதல்; ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் காஸாவில் பலி!
இஸ்ரேல் தாக்குதல்; ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் காஸாவில் பலி!
தெற்கு காஸாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
நான்காவது மாடியின்மீது இஸ்ரேல் இரண்டு முறை வான்தாக்குதல் நடத்தியுள்ளது. மீட்புக்குழு மீட்புப் பணிக்காகவந்த நிலையில், மற்றொருமுறை வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சம்பவத்தை படம்பிடித்து கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் பலியாகினர். அசோசியேட்டட்பிரஸ், ரொய்ட்டர்ஸ், அல்ஜஸீரா உள்ளிட்ட பத்திரிகைகளைச் சேர்ந்த 5 பத்திரிகையாளர்கள் இதில் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு சர்வதேசம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் இது தவறுதலாக நடந்த ஒரு ‘துயரமான விபத்து’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு வருத்தம் தெரிவித்துள்ளார். மருத்துவமனை மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய இஸ்ரேல் இராணுவம் இதுகுறித்து உள் விச ரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
