இலங்கை
உள்ளூராட்சித் தேர்தலில் யாழில் போட்டியிட்ட 204 வேட்பாளர்கள் மீது பொலிஸார் விசாரணை!
உள்ளூராட்சித் தேர்தலில் யாழில் போட்டியிட்ட 204 வேட்பாளர்கள் மீது பொலிஸார் விசாரணை!
கடந்த உள்ளூராட்சிச்சபையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 204 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வேட்பாளர்கள் தங்களது சொத்து அறிக்கைகளைச் சமர்ப்பிக்காததை அடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது பொலிஸார் சொத்து மதிப்பு அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத வேட்பாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
